அரசியலில் இருந்து விலகும் டிடிவி தினகரன்? சர்ச்சை பின்னணி என்ன??

ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (10:13 IST)
ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்குப் பின்னர் அரசியலைவிட்டு ஒதுங்கும் நிலையில் தாம் இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சசிகலா சிறைக்குப் போகும் முன்னர் டிடிவி தினகரனை அதிமுகவின் துணை பொதுச்செயலராக நியமித்தார். இதையடுத்து தினகரனும் கட்சி, ஆட்சி இரண்டையும் கைப்பற்றுவதில் தீவிரமாய் செயல்பட்டு வருகிறார்.
 
இதன் ஒருபகுதியாகவே ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் அவரே போட்டியிடுகிறார். ஆர்கே நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றால் அடுத்து முதல்வர் பதவிக்கு முயற்சிப்பார் என்று கூறப்படுகிறது. 
 
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களும் இதை ஒப்புகொள்வார்களா என்ற சந்தேகமும் அனைவர் மத்தியிலும் உள்ளது. 
 
இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தினகரன், ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் அதிமுக இரு அணிகளும் கை கோர்த்து, நீங்கள் அரசியலை விட்டு செல்லுங்கள் என கூறினால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன் என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் இவரா அரசியலைவிட்டு செல்வார் என சிலர் பேசி சிரித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்