புரட்சித் தோழி ஆனார் சசிகலா - பேனர்கள் கிழிப்பு

செவ்வாய், 13 டிசம்பர் 2016 (09:36 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு புரட்சித் தோழி என்ற பட்டத்தை சில அதிமுக நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். 


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் அவரின் நெருங்கிய தோழி சசிகலாவை அமர வைக்க பெரும்பாலான அதிமுகவின் குரல் கொடுத்து வருகின்றனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் பல இடங்களில் சசிகலாவை முன்னிறுத்தி போஸ்டர்கள்  ஒட்டப்பட்டுள்ளன. அதில் சசிகலாவிற்கு புரட்சித் தோழி என்ற பட்டத்தை கொடுத்துள்ள அதிமுகவினர், பேனரில் ஜெயலலிதாவின் படத்தை சிறியதாக அச்சடித்துள்ளனர். 
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அதிமுக தொண்டர்கள், அந்த போஸ்டர்கள் மற்றும் பேனர்களை கிழித்த வண்னம் உள்ளனர். 
 
சசிகலாவை முன்னிறுத்தும் விவகாரம், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே வேறுபட்ட எண்ணம் கொண்டிருப்பதை காட்டுகிறது. மேலும் இது அதிமுக வட்டாரத்தில் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்