இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் ஆயுள் தண்டனை காலத்தை தாண்டியும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிலிருந்து மற்ற கட்சிகள் தேமுதிக-மக்கள் நல கூட்டணி உடையும் என்று எதிர்பார்த்திருந்தன. ஆனாலும், இணைந்தே தேர்தலை சந்தித்தன. தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில் தனித்தனியாக பிரிந்து செல்ல வாய்ய்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. தற்போது திருமாவளவன் இவ்வாறு கூறியிருப்பது மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.