ந‌தி‌க‌ள் இணை‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌‌ம் ‌விரை‌வி‌ல் துவ‌‌க்க‌ப்படு‌ம்: த‌‌மிழக அரசு!

வியாழன், 20 மார்ச் 2008 (17:42 IST)
த‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்ந‌திகளஇணை‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌மவரு‌‌ம் ‌நி‌தியா‌ண்டி‌லதுவ‌‌்க‌ப்படு‌மஎ‌ன்றத‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்தச‌ட்ட‌பபேரவை‌யி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் க.அ‌‌ன்பழக‌னதா‌க்க‌லசெ‌ய்த ‌நி‌‌தி‌நிலஅ‌றி‌க்கை‌யி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளதாவது:

தமி‌ழ்நாடு போன்ற மாநிலங்களின் நீர் பற்றாக்குறை பிரச்சனைகளுக்கும், நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனைகளுக்கும், தேசிய நதிகள் இணைப்புத் திட்டமே ஒரே தீர்வாகும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில்; இதன் முதற்கட்டமாக, மாநிலங்களுக்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டங்களையாவது செயல்படுத்த மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ஏற்று, மத்திய அரசின் விரைவுபடுத்தப்பட்ட பாசன உதவித் திட்டத்தின் கீ‌ழ் இத்தகைய பணிகளுக்கு நிதியுதவி வழங்க தேசிய வளர்ச்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில்; அந்த நிதியுதவியை எதிர்நோக்கி, மாநில அரசின் நிதியிலிருந்து, தமி‌ழ்நாட்டில் பாயும் பின்வரும் நதி இணைப்புகளுக்கான பணிகள் வரும் 2008-2009 ஆம் நிதியாண்டில் தொடங்கப்படும்.

1) வெள்ளக் காலங்களில் காவிரி ஆற்றில் பெருகும் உபரி நீரை, வறண்ட மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான காவிரி - அக்னியாறு - கோரையாறு - பாம்பாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக; காவிரியாற்றின் குறுக்கே கட்டளைப் பகுதியில் கதவணை
அமைக்கும் திட்டம் ரூ. 165 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, இந்நதிகளை இணைப்பதற்கான 255 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வா‌ய்கள் அமைப்பது குறித்து தயாரிக்கப்பட்டு வரும் விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் கால்வா‌ய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

(2) தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கான தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் ரூ. 369 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

க‌ல்லணை‌க் கா‌ல்வா‌யை‌ச் ‌சீரமை‌க்க ரூ.150 கோடி!

காவிரி பாசனப் பகுதி மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப் பகுதி ஆகியவற்றில் உள்ள முக்கியக் கால்வா‌ய்களைச் சீரமைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படு‌ம். அப்பகுதிகளில் உள்ள முக்கியக் கால்வா‌ய்களான கல்லணைக் கால்வா‌ய் ரூ.150 கோடி மதிப்பீட்டிலும், காளிங்கராயன் கால்வா‌ய் ரூ.12 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.

இ‌வ்வாறு அ‌தி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்