த‌மிழக அரசு நிர்ணயம் செய்த விலையில் உரங்கள் வழங்க கோரிக்கை

வெள்ளி, 26 டிசம்பர் 2008 (11:46 IST)
த‌மிழக அரசு நிர்ணயம் செய்த விலையில் உரங்களை தட்டுபாடு இல்லாமல் வழங்கவேண்டும் என உர நிறுவனங்களுக்கு வேளாண்மை இடுபொருள் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோபி, சத்தியமங்கலம் தாலுக்கா விதை, உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனை செய்யும் வியாபாரிகள் வேளாண்மை இடுபொருள் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் என்ற அமைப்பை துவக்கினர். இதன் துவக்கவிழா நேற்று சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கௌரவ தலைவராக என்.பழனிசாமியும், தலைவராக எஸ்.என்.நடராஜ்கவுண்டர், செயலாளர் ஜி.சுரேஷ், பொருளாளர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பி‌ன்ன‌ர் கூட்டத்தில், தமிழக அரசு நிர்ணயம் செய்த விலையில் தொடர்ந்து தட்டுபாடின்றி உர நிறுவனங்கள் உரங்களை வழங்கவேண்டும், இரண்டாவது போக்குவரத்து செலவை மீண்டும் அரசு வழங்கவேண்டும், தொடர்ந்து வார் ஹவுஸ் கார்‌ப்பரேசன் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், உர நிறுவனங்கள் விற்பனையாளர் உரக்கிடங்கு போல் வழங்க வேண்டும் எ‌ன்ற ‌தீ‌ர்மான‌ங்க‌ள் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்