தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

திங்கள், 23 ஜனவரி 2012 (16:05 IST)
வ‌ங்க‌க் கட‌லி‌ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,

ஜனவரி மாதம் 22ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகையை மையமாகக் கொண்டு ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது.

இதனால் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட கடலோரமாவட்டங்களில் பலத்த மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

22ஆம் தேதி வானிலை கணிப்பின்படியும், நிலநடுக்க தேதி கணிப்பின்படியும் ஜனவரி 26ஆம் தேதி உலகின் ஏதாவது ஒரு பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்