மாணவிகளுக்கு சமர்ப்பனம்!
திங்கள், 31 டிசம்பர் 2007 (19:44 IST)
அந்த நாளை தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள மக்கள் யாரும் மறந்திருக்க முடியாது. தங்கள் கல்லூரி வாழ்க்கையில் இன்பத்தை கழித்து வந்த அந்த மூன்று மாணவிகளும் தாங்கள் நெருப்புக்கு பழியாவோம் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
2000ஆம் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் தர்மபுரி அருகே பேருந்தில் சந்தோஷ கனவுகளுடன் வந்து கொண்டிருந்தனர். ஆனால் அந்த மாணவிகளின் கனவு சில நிமிடங்களிலேயே கலைந்து போனது. அவர்கள் வந்த பேருந்தை வழிமறித்து சில கலவரக்காரர்கள் தீ வைத்தனர். அந்த கோர சம்பவத்தில் ஹோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற மூன்று மலர்கள் தீக்கு இறையாயினர்.
இந்த சம்பவம் இவர்களது பெற்றோர்களை மட்டுமின்றி தமிழக மக்களையும் பெரிதும் பாதித்தது. மூன்று மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட இந்த கொடுமை வேறு எங்கும் ஏற்படக்கூடாது, குற்றவாளிகள் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும் என்று உறுதியுடன் இருந்தனர்.
இந்த வழக்கு சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் ஒட்டுமொத்த மாணவர்களும் சாட்சியம் அளித்தனர். பேராசிரியர்களும் தங்கள் முன் நடந்தவற்றை கண்ணீருடன் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.
அந்த நாள் (2007 பிப்.15) தமிழக மக்களுக்கு மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களுக்கும் மறக்க முடியாத நாள். மூன்று மாணவிகளின் சாவுக்கு காரணமான மூன்று பேருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 25 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து தூக்கு தண்டனை கைதிகள் மூன்று பேர் உள்பட 28 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சேலம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.
2007ஆம் ஆண்டு வழக்கு இந்த தீர்ப்புதான் அந்த மாணவிகளின் பெற்றோர்களுக்கும், தமிழக மக்களுக்கும் புத்தாண்டு. இது போன்ற சம்பவம் இனி வரும் காலங்களில் ஏற்படாத வண்ணம் நாம் நடந்து கொள்ள வேண்டும். பெற்ற பிள்ளைகளை இழந்த பெற்றோர்களின் மனம் எவ்வளவு துடிதுடித்திருக்கும். அவர்களுக்குத்தான் புது வருட பிறப்பான 2008ஐ குதுகுலத்துடன் வரவேற்பார்கள். ஆனால் தங்கள் பிள்ளைகளின் இழந்த சோகம் மனதில் இருக்கத்தான் செய்யும்.
இந்த ஆரணித் தரமான தீர்ப்பை புத்தாண்டாக கொண்டாடுவோம்... மாணவிகளுக்கு அந்த புத்தாண்டை சமர்ப்பிப்போம்...