2007ல் தமிழ் திரையுலகம்!

திங்கள், 31 டிசம்பர் 2007 (19:39 IST)
ஒரு பொழுது விடிகிற உற்சாகத்துடனும் மலர்ச்சியுடனும் தான் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கிறது. ஒரு பூ மலர்கிற அனுபவத்தை முதல்நாள் வழங்கும் அதுவே... நகர நகர காட்டாற்று வெள்ளத்தைப் போல வளர்ச்சி வீழ்ச்சி எழுச்சி துடிப்பு செடிப்பு என சகல அனுபவ சுழிப்புகளையும் சிதறவிட்டு விட்டு தன் வாமனரூபம் விஸ்வரூபம் அனைத்தையும் தரிசிக்கவிட்டு அடுத்த ஆண்டுக்கு வழிவிட்டு அகன்று விடுகிறது.

ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஆட்டம் போட்ட 2007 தன் தடங்களை அனைத்து துறைகளிலும் பதிவு செய்து விட்டுத்தான் இடம் பெயர்ந்திருக்கிறது. இந்த 2007ஆம் ஆண்டு சினிமாவில் என்னென்ன சலனங்கள், சந்தோஷங்கள், சவால்கள், சங்கடங்களை வழங்கியுள்ளது என்பதை மட்டும் இங்கே பார்ப்போம்.

இந்த 2007ல் தமிழ்த் திரையுலகில் 113 படங்கள் வெளியாகியுள்ளன.

வெளிவந்த திரைப்படங்கள

குரு, போக்கிரி, ஆழ்வார், கலக்குற சந்துரு, லட்சியம், சாதனை, வீராசாமி, தீபாவளி, ீ, பச்சைக்கிளி முத்துச்சரம், பருத்தி வீரன், மொழி, முருகா, அகரம், திருமகன், முனி, நண்பனின் காதலி, சபரி, குற்றப்பத்திரிகை, வியாபாரி, மணிகண்டா, குப்பி, கூடல் நகர், நிறம், அடாவடி, அற்புத தீவு, கானல் நீர், மாயக்கண்ணாடி, உன்னாலே உன்னாலே, நான் அவன் இல்லை, முதல் கனவே, தண்டாயுதபாணி, மதுரை வீரன், பரட்டை என்கிற அழகு சுந்தரம், சென்னை-28, காசு இருக்கணும், அச்சச்சோ, திருரங்கா, நினைத்து நினைத்து பார்த்தேன், பாலி, ரசிகர் மன்றம், நீ நான் நிலா, பிறப்பு, சிவாஜி, துள்ளல், நந்து, என்னைப்பார் யோகம் வரும், மாமதுரை, கிரீடம், வீராப்பு, தீ நகர், தொட்டால் பூ மலரும், செல்லத் திருடா, என் உயிரினும் மேலான, பள்ளிக்கூடம், ஆரியா, அன்புதோழி, தொல்லைபேசி, ஒரு பொண்ணு ஒரு பையன், அம்முவாகிய நான்.

உற்சாகம், தூவானம், மருதமலை, சீனா தானா 007, திருத்தம், வசந்தம் வந்தாச்சு, சிவி, இனிமே நாங்கதான், நம்நாடு, உடம்பு எப்படி இருக்கு, நெஞ்சைத்தொடு, மலைக்கோட்டை, மனசே மவுனமா, வேகம், சிருங்காரம், முதன் முதலாய், பசுபதி மே பா ராசாக்கா பாளையம், வீரமும் ஈரமும், தவம், கற்றது தமிழ், பிறகு, நாளைய பொழுது உன்னோடு, ஞாபகம் வருதே, சந்திரமதி, கண்ணாமூச்சி ஏனடா, அழகிய தமிழ்மகன், வேல், தாமிரபரணி, பொறி, நினைத்தாலே, கருப்பசாமி குத்தகைதாரர், 18 வயசு புயலே, சத்தம் போடாதே, ஓரம்போ, பொல்லாதவன், ஆக்ரா, நிழல், ஒன்பது ரூபாய் நோட்டு, கேள்விக்குறி, ராமேஸ்வரம், எவனோ ஒருவன், கல்லூரி, பெரியார், மிருகம், பில்லா, புலி வருது, கண்ணா, பழனியப்பா கல்லூரி, இப்படிக்கு என் காதல், மச்சக்காரன், பெரியார்.

முதலிடத்தில் சத்தியராஜ், பாவனா!


2007ல் வெளியானவற்றில் அதிகமான படங்களில் நடித்திருக்கு ம் நடிகர்களில் முதலிடம் பிடிப்பவர் சத்யராஜ். அடாவடி, பெரியார், கண்ணாமூச்சி ஏனடா, ஒன்பது ரூபாய் நோட்டு ஆகிய 4 படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார். இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் அஜித் (ஆழ்வார், கிரீடம், பில்லா).

நாயகிகளில் முதலிடம் பிடித்திருப்பவர் பாவனா. இவர் நான்கு படங்களில் நடித்துள்ளார். அடுத்து தலா 3 படங்களில் நடித்து 2வது இடத்தில் உள்ளனர் அசின், ஜோதிகா. தலா இரண்டு படங்களில் நடித்துள்ள ஸ்ரேயா, பிரியாமணி, மீரா ஜாஸ்மின், தமன்னா, சினேகா, சந்தியா, கார்த்திகா மல்லிகா கபூர் ஆகியோர் 3வது இடத்தில் உள்ளனர்.


வில்லனில் நம்பர் ஒன்!
வில்லன்- குணச்சித்திர நடிகர்களில் 7 படங்கள் நடித்து முதல் இடத்தில் உள்ளார் பிரகாஷ்ராஜ். 5 படங்களில் நடித்துள்ள நாசர் 2வது இடத்தில் உள்ளார். 4 படங்களில் நடித்துள்ள லால் 3வது இடத்தில் உள்ளார்.

காமடியில் நம்பர் ஒன்!

வைகைப் புயல் வடிவேல் முதலிடத்தில் உள்ளார். இவர் 9 படங்களில் நடித்துள்ளார். 8 படங்களில் படித்துள்ள கஞ்சா கருப்பு 2வது இடத்தில் உள்ளார். சந்தானம் 5 படங்களில் நடித்துள்ளார். விவேக், கருணாஸ் தலா 4 படங்களில் நடித்துள்ளனர்.

இசையில் நம்பர் ஒன்!
11 படங்களுக்கு இசை அமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா முதலிடத்ததில் உள்ளார். 9 படங்களுக்கு இசை அமைத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா 2வது இடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் தேவா-8, மணிசர்மா-5, சபேஷ் முரளி, பரத்வாஜ், இமான் ஆகியோர் தலா 4 படம், ஏ.ஆர்.ரகுமான் 3 படம். லால்குடி ஜெயராமன், கண் பார்வையற்ற மேடைப் பாடகர் கோமகன் ஆகியோர் இந்த ஆண்டு அறிமுகம் ஆனவர்கள்.

புது முகங்கள்!

கார்த்திக் (பருத்தி வீரன்), வினய், (உன்னாலே உன்னாலே), ஷக்தி (தொட்டால் பூமலரும்), அஸ்வின் சேகர் (வேகம்), ஆதி (மிருகம்), அசோக் (முருகா).


நாயகிகள்!

பாரதி (அம்முவாகிய நான்), பானு (தாமிரபரணி), தனுஷா (உன்னாலே உன்னாலே), கார்த்திகா (நம்நாடு), விஜயலட்சுமி (சென்னை-28), மேக்னா (நீ நான் நிலா).

ரிமேக் படங்கள

ரஜினியின் பழைய பில்லா படம் அஜீத், நயன்தாரா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இதேபோல பாலச்சந்தர் இயக்கிய நான் அவன் இல்லை படம் ஜீவன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

100 நாட்கள் தாண்டி ஓடிய படங்கள்!

தீபாவளி, தாமிரபரணி, சென்னை 28, நான் அவன் இல்லை, கருப்பசாமி குத்தகைகாரர், பள்ளிகூடம், மருதமலை படங்கள் 100 நாட்கள் ஓடின.

பருத்திவீரன் 300 நாட்களை தாண்டியது. போக்கிரி 275 நாட்கள் ஓடியது. சிவாஜி 175 நாட்களையும். மொழி 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தன.

நட்சத்திர திருமணங்கள்!

அபிஷேக் -ஐஸ்வர்யாராய்
நடிகர் ஜீவா- சுப்ரியா
ஸ்ரீகாந்த்- வந்தனா
ரக்ஷிதா இயக்குனர் பிரேம்
பூமிகா- யோகா மாஸ்டர் பரத்குமார்
மாளவிகா- தினேஷ் மேனன்
பெஞ்சமின் -எலிசபெத்
விஜய் யேசுதாஸ் - தன்சனா
நாகேந்திர பிரசாத்- ஹேமலத

புதிய முயற்சிகள்!

முதல் முதலாக படுக்கும் வசதி கொண்ட தியேட்டர் அபிராமி வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ஒன்பது ரூபாய் நோட்டு புதினம் திரைப்படமானது.
பெரியார் வாழ்க்கை வரலாறு திரைப்படமானது.
ராஜீவ் காந்தி படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கைத் திரைப்படம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்தது.
இனிமே நாங்கதான் என்ற முப்பரிமாண திரைப்படம் வெளியானது.
ஒரு பாடல் கூட இடம் பெறாமல் எவனோ ஒருவன் என்ற திரைப்படம் வெளிவந்தது.
சில கசப்புகள்

பிரசாந்த் மனைவி கிரகலட்சுமியை பிரிந்தார்.

தசாவதாரம் படக்கதை வழக்கில் கமலஹாசனுக்கு ஆதரவாக தீர்ப்பு

ஒளிப்பதிவாளர் வைத்தி தன்னை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்ய முயன்றதாக நடிகை காவேரி வழக்கு.

மிருகம் படப்பிடிப்பில் பத்ம பிரியா கன்னத்தில் அறைந்த டைரக்டர் சாமிக்கு ஒரு வருடம் படங்கள் இயக்க தடை.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா- சுஜாயா விவாக ரத்து கேட்டு மனு.

புற்று நோயால் பிரபல நடிகை ஸ்ரீவித்யா மரணம்.

உன்னாலே உன்னாலே டைரக்டர் ஜீவா ரஷ்யாவில் மாரடைப்பால் மரணம்.

வெப்துனியாவைப் படிக்கவும்