2007 இல் இந்தியா!

வியாழன், 27 டிசம்பர் 2007 (18:02 IST)
இந்த ஆண்டு இந்தியா எல்லா துறைகளிலும் புதிய புதிய மாற்றங்களைச் சந்தித்தது. கண்டுபிடிப்புகள், கேளிக்கைகள் போன்றவற்றுக்கு பஞ்சமில்லாத நிலையில், குண்டுவெடிப்புகள், அரசியல் கலவரங்கள் போன்றவையும் ஏற்படாமல் இல்லை.

அரசியல

webdunia photoFILE
புத்தாண்டு தொடங்கி ஏழாவது நாளில் நாட்டின் வடகிழக்குப் பகுதி கலவரத்தைச் சந்தித்தது. மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கிய போராட்டங்கள் கலவரமாக மாறி மார்ச் 14 ஆம் தேதி வரை தொடர்ந்து 14 அப்பாவிகளின் உயிர்களைப் பலிகொண்டதையடுத்து பெரும் பிரச்சனையானது.

இந்நிகழ்வு மேற்குவங்க கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களுக்கு நீக்கமுடியாத கரும்புள்ளியை தந்ததுடன், நாடாளுமன்றத்திலும் புயலைக் கிளப்பியது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் விசாரணையில் உள்ளது.

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், எரிசக்தி துறையில் தன்னிறைவு பெறுவதற்கும் அவசியம் என்று கூறி பா.ஜ.க. தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசால் தொடக்கி வைக்கப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மரணக் கயிறாக மாறியுள்ள நிகழ்வு இந்த ஆண்டுதான் நடந்தது.

இருநாட்டு அதிகாரிகளும் நடத்திய பேச்சில் திருப்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 27 ஆம் தேதி அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கின. 123 ஒப்பந்தத்தின் முழு வடிவம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் இடையில் வந்த ஹைட் சட்டத்திற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒப்பந்தத்தை செயல்படுத்தும் பணிகள் முடங்கின.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுவந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக லால் கிஷண் அத்வானி அறிவிக்கப்பட்டார்.

தேர்தல்கள

PTI PhotoPTI
இந்தியக் குடியரசு வரலாற்றில் முதல்முறையாக குடியரசு தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். ஜூலை மாதம் 25 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் நமது நாட்டின் 12 ஆவது குடியரசு தலைவராக, ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் பிரதீபா பாட்டீல் பதவியேற்றார்.

அதையடுத்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில், குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மொஹமது ஹமீது அன்சாரி பதவியேற்றார்.

பஞ்சாப

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வெளியான பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளில் சிரோன்மணி அகாலிதளம் - பா.ஜ.க. கூட்டணி 67 இடங்களைப் வென்றது. மொத்தமுள்ள 116 இடங்களில் காங்கிரஸ் 44 இடங்களையும் மற்றவை 5 இடங்களையும் கைப்பற்றின.

உத்தரபிரதேசம

webdunia photoWD
மே மாதம் 7 கட்டங்களாக நடந்த உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி 206 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றார். மே 11 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 22 இடங்களை மட்டுமே பெற்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு மண்ணைக் கவ்வியது. உ.பி.சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 402 இடங்களில் சமாஜ்வாதி கட்சி 97 இடங்களையும், மற்ற கட்சிகள் 26 இடங்களையும் பெற்றன.

கோவா

கோவா யூனியன் பிரதேசத்திற்கு நடந்த தேர்தலின் முடிவுகள் ஜூன் மாதம் 6 ஆம் தேதி வெளிவந்தன. இதில் இந்திய தேசியக் காங்கிரஸ் சிறிய வித்தியாசத்தில் வென்றது.

மொத்தம் 40 இடங்களில் காங்கிரஸ் 16, பா.ஜ.க. 14, என்.சி.பி.03, மற்றவை 7 இடங்களில் வெற்றி பெற்றன.

குஜராத

PTI PhotoPTI
குஜராத் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 182 இடங்களுக்கான வாக்குப் பதிவு டிசம்பர் மாதம் 11, 16 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. பா.ஜ.கவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் நேரடி மோதலை ஏற்படுத்தியுள்ள இத்தேர்தல் நாடு முழுவதிலும் பலத்த எதர்பார்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், கணிப்புக்கள் அனைத்தையும் தாண்டி நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. மாபெரும் வெற்றியைப் பெற்றது. 3வது முறையாக குஜராத் முதலமைச்சர் ஆகிறார் மோடி.


இமாச்சல பிரதேசம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் சட்டப் பேரவைக்கு நவம்பர் 14, டிசம்பர் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 68 இடங்களில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புக்கு இடையில் வருகிற 28 ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்கவுள்ளது.

வழக்குகள்

PTI PhotoPTI
1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை வெடிகுண்டு வழக்கின் தீர்ப்பு இந்த ஆண்டு வழங்கப்பட்டது. இந்தி நடிகரான சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அவருக்கு பிணைய விடுதலை வழங்கியதை அடுத்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்தார்.

மான்வேட்டை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் சல்மான் கான் சரணடைந்தார்.

வினோத், அனூப் குமார், அமிட் குமார் ஆகிய மூவரையும் பஞ்சாப் காவல்துறையினர் ஏப்ரல் 25-ஆம் தேதி கைது செய்தனர். உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டை முன்வைத்து சூதாட்டம் நடத்தியபோது இந்த மூவரும் பிடிபட்டனர். செல்போன்கள், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

பயங்கரவாத தாக்குதல்கள்

பிப்ரவரி மாதம் 18- ஆம் தேதி, ஹரியானா மாநிலம் பானிபட் அருகே டெல்லி- அட்டாரி இடையிலான சம்ஜவ்தா விரைவு ரயிலில் குண்டு வெடித்தது. 68 பயணிகள் பலியானார்கள். இரு ரயில் பெட்டிகள் தீயில் கருகின.

webdunia photoWD
ஐதராபாத்திலுள்ள மெக்கா மசூதியில் மே மாதம் 18- ஆம் தேதி குண்டு வெடித்தது. 12 பேர் உயிரிழந்தார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இந்தியாவில் முதல்முறையாக மசூதியில் தொழுகையின்போது குண்டு வெடித்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஜூலை 7ஆம் தேதியன்று பரபரப்பாக இயங்கிய மும்பை புறநகர் தொடர்வண்டிகளில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. வெறும் 11 நிமிட இடைவெளியில் நடந்த 7 குண்டுவெடிப்புகளில் 209 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதற்கு லஷ்கர் இ தாயிபா, சிமி ஆகிய இயங்கங்கள்தான் காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஐதராபாத்தில் உள்ள லும்பினி பார்க் மற்றும் ஒரு ஓட்டலில் அடுத்தடுத்து ஆகஸ்ட் மாதம் 30- ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் மராண்டி உட்பட 17 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அக்டோபர் மாதம் 27- ஆம் தேதி சுட்டுக்கொன்றனர்.

நவம்பர் மாதம் 23தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, வாரணாசி, பைசாபாதநகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் நடந்தொடரகுண்டுவெடிப்புகளில் 5 வழக்கறிஞர்களஉட்பட 13 பேரஉயிரிழந்தனர்.

அறிவியல் -கேளிக்கை

‘இந்திய கடல் தகவல் மையத்தின’ கீழ் இயங்கும் ஹைதராபாத் சுனாமி எச்சரிக்கை மையத்தில் புதிய கருவிகளை இந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நம் விஞ்ஞானிகள் நிறுவினர். இதன்படி சுனாமி உருவா‌கியு‌ள்ளதை 13 நிமிடங்களுக்கு முன்னதாக கண்டறியலாம். இந்த அவகாசத்தை 7 நிமிடங்களாக குறைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

webdunia photoWD
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இத்தாலி நாட்டின் செயற்கைக்கோளான அஜிலே, பி.எஸ்.எல்.வி. - சி 8 விண்கலம் மூலம் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக ‘சயின்ஸ் எக்ஸ்பிரஸ’ ரயில் இந்த ஆண்டு ஓடத் தொடங்கியது. நாட்டில் உள்ள 57 நகரங்களை இந்த ரயில் வலம் வந்தது. ஒவ்வொரு நகர மாணவர்களும் ரயிலில் ஏறி அறிவியலை தெரிந்து கொண்டார்கள். அக்டோபர் 30 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கும், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலும் இந்த ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி நடந்த அழகிப் போட்டியில், இந்திய அளவில் மிஸ் இந்தியா உலகமாக சாரா ஜேன் டியாசும், மிஸ் இந்தியா புவியாக பூஜாவும், மிஸ் இந்தியா பிரபஞ்சமாக பியூஜா குப்தாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

டெல்லியில் ஏப்ரல் 30 ஆம் தேதி நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 4 ஆயிரம் லாரி ஓ‌ட்டுநர்கள் முன்னிலையில் மேடையில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரி, ஷில்பா ஷெட்டியை கட்டி அணைத்து முத்தமிட்டது பெரும் சர்ச்சையானது.

webdunia photoWD
பரபரப்பாக பேசப்பட்ட காதல் ஜோடி ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம் ஏப்ரல் 20-ஆம் தேதி மும்பையில் ரகசியமாக நடந்தது. இதில் முக்கியமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மீடியாக்களுக்கு அனுமதி இல்லை.