இந்த நிலையில் ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதை ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் உள்பட ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இருவரும் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும், இருவரில் கமல் ரஜினியை முந்தி அரசியலில் குதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் கலைத்துறையில் முடிவு காலம் நெருங்குவதால், அந்த புகழால் அரசியலில் நுழைவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ரஜினி, கமலை மறைமுகமாக மக்களவை துணைத்தலைவர் தம்பித்துரை விமர்சனம் செய்துள்ளார். ஆனால் தம்பித்துரையின் இந்த கருத்துக்கு ரஜினி, கமல் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.