மீண்டும் சென்னை வரும் டெல்லி போலீஸ் டீம்: யார் யார் கைது செய்யப்படுவார்கள்?
வியாழன், 27 ஏப்ரல் 2017 (07:42 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தினகரனை டெல்லி போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்துள்ள நிலையில் இன்று தினகரனை சென்னக்கு அழைத்து வந்து விசாரணையை தொடரவுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி போலீசின் இன்னொரு டீமும் இன்று அல்லது நாளை சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் பதுங்கியிருக்கும் ஹவாலை கும்பலை பிடிக்கவே இந்த டீம் சென்னை வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் சென்னை வரும் டெல்லி போலீசார் திரும்பவும் டெல்லி திரும்பும்போது அதிமுக எம்பி ஒருவரும், அதிமுகவின் முக்கிய புள்ளியும், தினகரனின் வலது கரமாக செயல்பட்ட ஒருவரையும் கைது செய்துவிட்டு உடன் அழைத்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது
டெல்லி போலீசாரின் சென்னை வருகை குறித்த தகவலால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் கிலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.