பிரிந்து சென்ற வைகோ: என்ன சொல்கிறார் திருமாவளவன்?

புதன், 28 டிசம்பர் 2016 (04:24 IST)
மதிமுக இல்லாவிட்டாலும் மக்கள் நலக் கூட்டணி தொடரும் என்று கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ”மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக்கொள்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் தோழமையும், நட்பும் என்றும் தொடரும். அதற்கு ஒரு அடையாளமாகத்தான் வருகிற 30ஆம்தேதி நல்லக்கண்ணு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறேன்” என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

வைகோவின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ”மக்கள் நலக் கூட்டணி கட்சிகளுக்கிடையே சில முரண்பாடுகள் இருந்தது உண்மைதான்.

ஆனால் மதிமுக இல்லாவிட்டாலும் மக்கள் நலக்கூட்டணி தொடரும் என்றும் எங்கள் கூட்டு இயக்கத்தின் புதிய செயல் திட்டத்தை விரைவில் வெளியிடுவோம்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்