உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டது தேர்தல் ஆணையம். ஆளும் கட்சியான அதிமுக, வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. எதிர்கட்சியான திமுகவும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. மதிமுக, தாமக என அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பாக களம் இறங்கிவிட்டன.
ஆனால், தேமுதிக என்ற கட்சி இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சமீபத்தில் விஜயகாந்த் தனது நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால், சட்டசபை தேர்தலில் நிறைய செலவு செய்துவிட்டதால், உள்ளாட்சி தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும், தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக நிர்வாகிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே, ‘வேட்புமனுவிற்கு பணம் கூட கொடுக்க வேண்டும்.. அவர்களை போட்டியிட சொல்லுங்கள்’ என்று விஜயகாந்த் கூறியுள்ளார். ஆனாலும், எத்தனை பேர் போட்டியிட முன் வருவார்கள் என்று தெரியவில்லை என்று தேமுதிக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.