வெளிநாட்டில் இருந்து வந்த பிருத்விராஜுக்கு கொரோனா சோதனை – வெளியான முடிவு!

புதன், 3 ஜூன் 2020 (13:12 IST)
கொரோனாவால் வெளிநாட்டில் சிக்கி இரண்டு மாதங்களுக்குப் பின் நாடு திரும்பிய பிருத்விராஜுக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் ஆடுஜீவிதம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வெளிநாடுகளுக்கு சென்று மாட்டிக்கொள்ளும் இந்தியர்களின் வாழ்வைப் பற்றியது. இந்த படத்துக்காக 58 பேர் கொண்ட குழுவினரோடு ஜோர்டான் நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தில் முகாமிட்டு இருந்தனர் படக்குழுழ்வினர். அப்போது கொரோனா பரவல் உச்சத்தை தொட்டதால் விமானங்கள் முடக்கப்பட்டதால் படக்குழுவினர் அனைவரும் அந்த நாட்டில் இருந்து இந்தியா திரும்ப முடியாத சூழலுக்கு ஆளானார்கள். அவர்களை இப்போது அங்கிருந்து மீட்டு வர முடியாது என மத்திய மற்றும் மாநில அரசுகள் கைவிரித்துவிட்டன.

அதையடுத்து அந்நாட்டு அரசிடம் அனுமதி வாங்கிய படக்குழு படப்பிடிப்பை நடத்தியது. இந்நிலையில் இப்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளதாக பிருத்விராஜ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த குழுவினருடனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் நிலையில் ஜோர்டானில் சிக்கியுள்ள படக்குழுவையும் மீட்க தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 58 பேரும் தனி விமானம் மூலம் மே 22 ஆம் தேதி இந்தியா வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட நிலையில் இப்போது பிருத்விராஜின் கொரோனா சோதனை முடிவு வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதால் விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்