பாதாம் பருப்புகளை தினமும் சாப்பிட்டு வந்தால் கெடுதலை ஏற்படுத்துமா...?

பாதாம் பருப்பானது சாப்பிடுவதற்கு ருசியாக தான் இருக்கும். ஆனால் இதனை அப்படியே சாப்பிட கூடாது. 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்.

பாதாம் பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள்  வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது.
 
தண்ணீரில் ஊறவைத்த பாதாம் பருப்பினை சாப்பிட்டால் இதிலுள்ள லிபேஸ் என்ற நொதி நாம் சாப்பிட்ட உணவை எளிதில் செரிக்க வைக்கின்றது.
 
இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். ஊறவைத்த பாதாமால் இரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்படும். நமது இரத்தத்தில் ஆல்ஃபா டேகோபெரோல் என்கிற  பொருள் அதிகரிக்கிறது.
 
பாதாம் பருப்புகளை தினமும் சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு நரம்புகள் வலுவடையும். உயிரணுக்கள் அதிகரித்து மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு குறைபாடுகள் நீங்கும்.
 
பாதாமில் கொழுப்பு காணப்படுவதால் இது எளிதில் வயிற்றை நிரப்பி விடும். வயிறு நிரம்புவதால் வேறு ஒன்றும் சாப்பிட முடியாது. இதனால் உடல் எடை  குறையும்.
 
தண்ணீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும், சர்க்கரை அளவும் கட்டுப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு இதில் உள்ள ஃபோலிக் அமிலம் குழந்தை ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
 
ஊறவைத்த பாதாமில் உள்ள ஆன்டி-ஆக்ஸி டென்ட்களால் இளமை தோற்றம் கிடைக்கும், இதிலுள்ள பி17 வைட்டமின் புற்றுநோயை எதிர்க்கும்.
 
பாதாம் பருப்புகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்துக்கள் இல்லை. எனவே இப்பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்