எத்தனையோ முறை ஜெயிக்க வச்சிருக்கீங்க… இன்னைக்கு தோக்க வச்சீட்டிங்க – கோலி ரசிகர்கள் அப்செட்!

வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (10:40 IST)
நேற்றைய போட்டியில் ஆர் சி பி அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் விராட் கோலியே மிக முக்கியமானக் காரணமாக அமைந்தார்.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதின. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி மிகவும் மோசமாக விளையாடியது அந்த அணியின் ரசிகர்களிடையே பெரும் வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தோல்விக்கு மிக முக்கியமானக் காரணமாக அமைந்தார் விராட் கோலி. கே எல் ராகுலின் இரண்டு அடுத்தடுத்த கேட்ச்களை விட்ட கோலி அதற்கு தண்டனையாக இந்த தோல்வியை பெற்றார். கோலி விட்ட கேட்சுகளுக்கு பின்னர் ராகுல் சுமார் 50 ரன்களை கடைசி இரண்டு ஓவரில் அடித்து துவம்சம் செய்தார். அதே போல பேட்டிங்கிலும் கோலி மிக மோசமாக விளையாடினார். இதன் மூலம் அணியின் தோல்விக்கு ஒட்டுமொத்தமாக அவரையே பொறுப்பேற்க வேண்டிய நிலை உருவானது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்