சல்மான் ருஷ்டி கண் பார்வை, கை செயலிழப்பு: மருத்துவர்கள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (12:38 IST)
சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண் பார்வை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதேபோல் ஒரு கை செயல் இழக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியூயார்க்கில் கத்திக்குத்துக்கு ஆளான இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது 
 
அவருக்கு ஒரு கண் முழுவதும் பார்வை இழந்து உள்ளதாகவும் ஒரு கை செயலிழந்து உள்ளதாகவும் மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் இன்னொரு கண்ணும் பார்வை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தி குத்திய ஈடுபட்டார். இதில் அவரது நெஞ்சு கழுத்து தலை மற்றும் உடலில் பதினைந்து இடங்களில் கடும் காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்