இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. உலக அளவிலான தினசரி பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி பற்றாக்குறை போன்றவற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரொனா வைரஸ் பரவ்ல் குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் ஏப்ரலில் நடத்தப்பட்ட தேர்தல் காரணமாக தொற்று அதிக அளவில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.