இவர் கர்ப்பமானபோதும் எடைதூக்குதல், மலை ஏறும் பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்துவந்தார். கர்ப்பமான முதல் முதல் மாதம் முதல் தினமும் எடை தூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
மேலும், வாரம் 4 முறை ஜிம்முக்கு செல்வதையும் , நாள் ஒன்றுக்கு 3 மைல் தூரம் அவரின் நாயுடன் நடை பயிற்சி மேற்கொள்வதையும், வாரம் ஒரு முறை 4 மைல் உயரத்திற்கு மலையேற்ற பயிற்சி மேற்கொள்வதையும் வழக்கம்போல் மேகன் செய்து வந்தார்.
இந்நிலையில், தனது கர்ப்ப காலத்தின் 40வது வாரத்தில், பிரசவம் ஆவதற்கு 2 தினங்களுக்கு முன்பு வரை பளு தூக்குதல் பயிற்சியை மேற்கொண்டு அன்றைய தினம் 215 பவுண்டுகள் எடையினை தூக்கி புதிய சாதனையை படைத்துள்ளார்.