தங்கள் மீதான விசாரணை முடியும்வரை இலங்கையைவிட்டு செல்லபோவதில்லை என்று ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த சில நாட்களாக மக்கள் கொந்தளித்து ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்
கடந்த 9 ஆம் தேதி இலங்கை பிரதமரான ரனில் விக்ரமசிங்கேவின் மாளிகை தீ வைத்து எரிக்கப்பட்டது என்பதும் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் துவம்சம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோட்டபயவின் சகோதர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சேவும் இலங்கையில்தன் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளி நாடு செல்லத் தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கின் மீதான் விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதையடுத்து, ராஜபக்சே, தங்களுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தால் விசாரிப்படும் வரை தாங்கள் நாட்டை விட்டுச் செல்லப்போவதில்லை என்று சுப்ரீம் கோர்டில் தெரிவித்துள்ளனர்.