இதனிடையே தற்போது 2020 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி, மலேரியா மற்றும் காசநோய் ஆகியவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, 2021 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரான் தென் ஆப்பிரிக்காவின் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அது பல நாடுகளுக்கு பரவி வருகிறது.
2022 ஆம் ஆண்டு தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வரும் ஆண்டாக அமைய வேண்டும். 2022 ஆம் ஆண்டு அனைத்து நாடுகளும் எதிர்கால பேரழிவைத் தடுப்பதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கும், முதலீடு செய்யும் ஆண்டாகவும் இருக்க வேண்டும் என கோரியுள்ளது.