தற்போது பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். அதிலும், வாட்ஸ்-அப்பை அனைவரும் பயன்படுத்தி, புகைப்படம் மற்றும் வீடியோக்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.
அந்நிலையில், கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்-ஆப் சேவை உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. இதனால், வாட்ஸ்-அப்பை பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, சென்னையில் மழையால் பாதிக்கப்படட மக்கள் வாட்ஸ் சேவை இல்லாமல் தவித்து வருகின்றனர். ஏனெனில், மழையால் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதி குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சென்னை வாசிகள் தொடர்ந்து அரசுக்கும், தனியார் தொலைக்காட்சிகளுக்கும் அனுப்பி வந்தனர்.