3,500 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு - உக்ரைன் ராணுவம்!

சனி, 26 பிப்ரவரி 2022 (14:05 IST)
உக்ரைனில் போர் நடத்தும் ரஷ்ய ராணுவத்தின் 3,500 வீரர்கள் உயிரிழப்பு என உக்ரைன் ராணுவம் அறிவிப்பு. 

 
நேற்று ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் நடத்திய பாதுகாப்பு தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய ராணுவத்தின் 30 போர் டாங்குகள் அழிக்கப்பட்டதாகவும், ரஷ்ய விமானப்படையின் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
 
இந்நிலையில் இன்று உக்ரைனில் போர் நடத்தும் ரஷ்ய ராணுவத்தின் 3,500 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் 102 போர் டாங்கிகள், 536 கவச வாகனங்கள், 15 பீரங்கிகள், 14 போர் விமானங்கள், 8 ஹெலிகாப்டர்களை வீழ்த்தி அழித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்