அமெரிக்க வரலாற்றிலேயே பொறுப்பற்ற அதிபர் ட்ர்ம்ப்தான் – சொன்னது யார் தெரியுமா?

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (10:40 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் இதுவரையிலான பொறுப்பற்ற அமெரிக்க அதிபர் என புதிய அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் நடப்பு அதிபரான ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார். இதனால் சமீபத்தில் அவரது ட்விட்டர் பதிவுகள் நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ட்ரம்ப் குறித்து ஜோ பைடன் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அதில் ‘அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பொறுப்பற்ற அதிபர் ட்ரம்ப்தான். தேர்தல் முடிவுகளை டிரம்ப் ஏற்க மறுப்பது அதிகார மாற்றத்தை தடுக்குமா என்பது குறித்து நான் யோசிப்பதில்லை. ஆனால் ஒரு நாடாக அமெரிக்கா குறித்த தவறான செய்தியை இது தெரிவிக்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்