GPS-ஐ பார்த்துக் கொண்டே காரில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Sinoj

வியாழன், 1 பிப்ரவரி 2024 (16:54 IST)
தாய்லாந்து நாட்டில் ஜிபிஎஸ்-ஐ பார்த்துக் கொண்டே  காரில் சென்ற பெண் ஒருவருக்கு விபரீதம்   நேர்ந்துள்ளது.

தெரியாத ஊருக்கு செல்பவர்கள் நிச்சயம்  சரியான இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக வேண்டி ஜிபிஎஸ்-ஐ பார்த்துக் கொண்டே செல்வார்கள்.

ஆனால்  சில இடங்களில், சில நேரங்களில் இந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பம் சொதப்பி விடுவதுண்டு.

இந்த  நிலையில், தாய்லாந்து நாட்டில் ஜிபிஎஸ்-ஐ பார்த்துக் கொண்டே  காரில் சென்ற பெண் ஒருவருக்கு விபரீதம்  ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் ஒரு பகுதிக்குச் செல்வதற்காகக பெண் ஒருவர் தன் காரில்  GPS- ஐ பார்த்துக் கொண்டே சென்றபோது, தவறுதலாக 120 அடி தொங்கு பாலத்தில் காருடன் மாட்டிக்கொண்டார்.

பின்னர், போலீஸார் உதவியுடன் அவர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து மீட்கப்பட்ட அப்பெண் கூறியதாவது: ஜிபிஎஸ்-ல் மட்டுமே கவனம் செலுத்தியதால் சுற்றிப் பார்க்கவில்லை. அப்பாலம் உறுதியானது என நினைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்