பிரேசில் நாட்டில் உள்ள மருந்துக்கடை ஒன்றில், திடீரென்று புகுந்த இரண்டு திருடர்கள் கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் கேட்டனர். அப்போது அந்த கடையின் உள்ளே மருந்து வாங்க வந்த பெண் ஒருவர், கொள்ளை சம்பவத்தை பார்த்து பதற்றத்தோடு நின்றிருந்தார்.
அப்போது அதனை கவனித்த ஒரு திருடன், அவரிடம் வந்து உங்கள் பணத்தை எடுங்கள் என்று மிரட்டியுள்ளான். அதற்கு அந்த பெண் பணம் என்னிடம் இல்லை என பயத்தில் அலறியுள்ளார். இதனால் அவரை ஆசுவாசப்படுத்துவதற்காக அந்த திருடன் அந்த பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டு அவரை சமாதானப்படுத்தினான்.