இதனை தொடர்ந்து, அவரை சர்வதேச நாடுகள் அங்கீகரித்தபோதிலும், ஷியா பிரிவு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினர் மீது வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்திவருகின்றனர். இந்நிலையில் ஏடனில் உள்ள பாதுகாப்புப் படையினர் முகாம் மீது, சனிக்கிழமை இரவு ஹூதி அமைப்பைச் சேர்ந்த மனித வெடிகுண்டு திடீரென தாக்குதல் நடத்தினான். இதில், பாதுகாப்பில் ஈடுபட்ட வீரர்கள் 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும், வீரர்கள், பொதுமக்கள், உள்பட 30க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.