அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்கு யூத மக்கள் எதிர்ப்பு.

செவ்வாய், 30 அக்டோபர் 2018 (18:09 IST)
கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா நகரில் உள்ள யூத வழிபாட்டு தலத்திற்குள் நுழைந்த அமெரிக்கர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
பின்பு இந்த தாக்குதல் நடத்திய ராபர்ட் என்ற 46 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து தாக்குதல் நடந்த வழிபாட்டு தலத்திற்கு வருகை தருவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
 
இதற்கு அம்மாகாண மக்கள் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் யூதர்கள் மீது குறி வைத்து நடத்தப்பட்ட இனவெறி தாக்குதல் என்று  ஐநா சபையும் கண்டனம்  தெரிவித்துள்ளது.
 
உலகெங்கும் இவ்விவகாரம் பரவலாகப் பேசப்பட்டும் ,விவாதிக்கப்பட்டும் வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்