இலங்கைக்கு இந்திய வழங்கிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்

ஞாயிறு, 12 ஜூன் 2016 (15:26 IST)
ஆழ்கடல் ரோந்துக் கப்பலை இலங்கைக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது.
 

 
இலங்கைக்கு இந்திய வழங்கிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் தயாரித்துள்ளது. 2350 டன் எடையும், 105 மீட்டர் நீளம் கொண்ட இந்த சயுரால கப்பலில் ஹெலிகாப்டர் தளம் உள்ளது. சுமார் 4500 கடல் மைல் தூரம் வரை கண்காணிக்கும்ப்பி வசதி உள்ளது. இந்த கப்பலை இந்தியா அடுத்த ஆண்டு இலங்கைக்கு வழங்க உள்ளது.
 
கோவா கப்பல் கட்டும் தளத்தில் நேற்று இந்த கப்பலின் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலங்கை பாதுகாப்பு அமைச்சக அதிகாரி வசந்தா குணவர்த்தன வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.
 
இந்த நிகழ்ச்சியில், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
 
இந்திய வரலாற்றில், ஒரு கப்பலை தயாரித்து வெளிநாட்டிற்கு வழங்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்