கடந்த 15ம் தேதி வழக்கம்போல காலையில் பள்ளிக்கு வேனில் கிளம்பி சென்றுள்ளான். செல்லும் வழியில் மயங்கி விழுந்திருக்கிறான் சிறுவன். அதை கூட வந்த எந்த மாணவர்களும் கவனிக்கவில்லை போல் இருக்கிறது. பள்ளிக்கு வேன் வந்ததும் அனைத்து மாணவர்களும் இறங்கி சென்றுவிட ஃப்ர்கான் மட்டும் மயங்கிய நிலையிலேயே கிடந்திருக்கிறான். வேனை ஓட்டி வந்த டிரைவரும் உள்ளே மாணவர்கள் யாரும் உள்ளே இருக்கிறார்களா என சோதிக்காமல் வண்டியை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
மாலை 3 மணிக்கு பள்ளி முடிந்ததும் மாணவர்களை அழைத்து செல்வதற்காக வேனை திறந்திருக்கிறார் டிரைவர். அங்கே மயங்கி கிடந்த ஃபர்கானை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஃபர்கான் இறந்து வெகுநேரமாகிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.