வன்முறையை தூண்டும் பப்ஜி? தடை விதிக்கும் தாலிபான்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (14:43 IST)
பப்ஜி விளையாட்டிற்கு இந்தியா உள்பட பல நாடுகளில் தடை உள்ள நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானும் தடை செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியவுடன் துப்பாக்கி ஏந்தி நகரங்களுக்குள் புகுந்து ஆட்சியை பிடித்தது தாலிபான் அமைப்பு. அதை தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் சட்டத்திட்டங்களில் பல மாற்றங்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஆப்கன் தொலைக்காட்சிகளில் பெண்கள் இடம்பெறாத அளவுக்கு, இடம்பெற்றாலும் முழுவதும் முகத்தை மறைத்த நிலையில்தான் தோன்ற வேண்டும் என பல கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் வெளிநாட்டு சேனல்கள் ஆப்கனில் ஒளிபரப்பு செய்யவும், வெளிநாட்டு படங்களை திரையிடவும் கூட தடை உள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள பப்ஜி, டிக்டாக் மீது தாலிபான்களின் தடை படலம் தொடர்கிறது. பப்ஜி விளையாட்டு வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாகவும், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த விளையாட்டில் தீவிரமாக ஈடுபடுவதால் மனநல, உளவியல் பிரச்சினைகளும் ஏற்படுவதாக பலரும் சொல்லி வரும் நிலையில் தாலிபான் இந்த முடிவை எடுத்துள்ளது.

அடுத்த 90 நாட்களில் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட மேலும் சில செயலிகளை ஆப்கனில் முற்றிலுமாக தடை செய்ய தாலிபான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்