ராமரை சொந்தம் கொண்டாடிய சர்மா ஒலியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

திங்கள், 25 ஜனவரி 2021 (08:49 IST)
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

 
ராமர் பிறந்த இடம் இந்தியாவில் உள்ள அயோத்தி என்றும், இந்திய இந்துக்களின் புனிதமான கடவுள் ராமர் என்றும் பல ஆண்டுகளாக நம்பிக்கையில் இருந்து வரும் நிலையில் திடீரென உண்மையான அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது என்றும் ராமர் இந்திய கடவுள் அல்ல என்றும், அவர் ஒரு நேபாளி என்று பேசிய சர்ச்சையை கிளப்பிய நேபாள பிரதமர் சர்மா ஒலியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.  
 
இந்நிலையில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியின் நிர்வாகக் குழு தலைவர் புஷ்பகமல் தஹார் பிரசந்தா - சர்மா ஒலி இடையே அதிகாரப் போட்டி நிலவி வரும் காரணமாக இந்த நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்