சிலியின் சாண்டியாகோ பகுதியில் பேட்மேன் உடையில் இரவில் உலா வரும் மனிதர் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளார்.
தென் அமேரிக்காவின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்து வருகிறார்கள். இந்நிலையில் சிலி நாட்டில் உள்ள சாண்டியாகோவின் ஆளற்ற வீதிகளில் இரவு நேரங்களில் பேட்மேன் உடையணிந்து பைக்கில் ஒருவர் செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அவர் சாண்டியாகோவில் ஆதரவின்றி சாலைகளில் வாழும் மக்களுக்கு இரவில் பைக்கில் வந்து உணவளித்துவிட்டு செல்வதாக தெரிய வந்துள்ளது.
பேட்மேன் உடுப்பில் திரியும் அந்த ஆசாமி பெயர் சைமன் சால்வதோர் என தெரிய வந்துள்ளது. பேட்மேன் உடுப்பில், முகக்கவசம் அணிந்து வரும் நத நபர் ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்து செல்லும் நிலையில், அப்பகுதியிம் சூப்பர்ஹீரோ போல அவரை பற்றிய புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி ட்ரெண்ட் செய்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சால்வதோர் “சிலியில் வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் பலர் உணவின்றி தவிக்கும் சூழல் உள்ளது. சக மனிதனாக அவர்களுக்கு உணவு ஒன்றையாவது அளிக்க வேண்டும் என இதை செய்கிறேன்” என கூறியுள்ளார்.