குடும்ப கவுரவத்தை காப்பாற்ற கொலை செய்தேன் : குவாண்டீலின் சகோதரர் வாக்குமூலம்

ஞாயிறு, 17 ஜூலை 2016 (13:00 IST)
சர்ச்சையான வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த பாகிஸ்தான் மாடல் அழகி குவாண்டீச் பலூச் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தினால் அந்த அணியின் கேப்டன் அஃப்ரிடிக்கு தன்னுடைய நிர்வாண வீடியோவை அனுப்பி வைப்பேன் என பாகிஸ்தான் மாடல் அழகி குவாண்டீல் பலூச் அறிவித்தார்.
 
இவரது இந்த அறிவிப்பு செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இதனால் அவர் பாகிஸ்தான் வீரர்களை திட்டி வீடியோ வெளியிட்டார். பின்னர் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியை காதலிப்பதக அறிவித்தார். தன்னுடைய ஒவ்வொரு அறிவிப்புகளின் மூலமும் ஊடகங்களின் கவனத்தை பெற அவர் சர்ச்சையாக எதையாவது செய்துகொண்டே இருப்பார். 
 
சமீபத்தில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த மதகுரு ஒருவருடன் செல்ஃபி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதன் மூலம் அந்த மதகுரு மத நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் குவான்டீல் பலூச் முல்தானில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். குவான்டீலை அவரது சகோதரரே சுட்டுக்கொன்றதாக காவல்துறை தரப்பு கூறியுள்ளது. மாடலிங் தொழிலை விட்டுவிடுமாறு அவர் கூறியதாகவும், குவான்டீல் மாடலிங்கை விடாததாலும் அவரை சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டது. ஆனால் அவர் சுட்டுக் கொல்லப்பட வில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.


 

 
இந்த வழக்கு தொடர்பாக, குவாண்டீலின் சகோதரர் வாசீம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் “குடும்ப கவுரத்தை பாதுகாக்கவே கொலை செய்தேன்.  என் தங்கையின் செயல்பாடுகள் எங்கள் குடும்ப கவுரத்தை களங்கப் படுத்தியது. இதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில், அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தேன்” என்று கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்