மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டி: வேட்புமனு தாக்கல் செய்தார் புதின்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (02:51 IST)
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைவதை அடுத்து அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக சமீபத்தில் விருப்பம் தெரிவித்த புதின் இன்று தேர்தல் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்

ரஷ்ய நாட்டு சட்டப்படி பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ஒருவர் பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதுடன் தன்னை ஆதரிக்கும் 3 லட்சம் வாக்களர்களின் கையொப்ப படிவத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

வரும் தேர்தலில் புதின் மீண்டும் வெற்றி பெற்றால் அவர் வரும் 2024ஆம் ஆண்டு வரை ரஷ்ய பிரதமராக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்