ஆனால் காசா மீதான தாக்குதல் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், ஹமாஸ் போராளிகளை ஒடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தொடரும் என்றும், தங்களின் குடிமக்கள், குழந்தைகள் மற்றும் வீரர்களை பாதுகாக்கவே ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் கூறினார்.