பிரபாகரனின் உடலம் எரிக்கப்படவில்லை புதைக்கப்பட்டது: சரத் பொன்சேகா

செவ்வாய், 5 ஏப்ரல் 2016 (11:18 IST)
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்டது என்று இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியும் மைத்திரிபால அரசின் அமைச்சருமான சரத் பொன்சேகா கூறியுள்ளார்.


 

 
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இறுதி யுத்தத்தின் பிறகு பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டு எரிக்கப்பட்டு அஸ்தி கடலில் வீசப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க கூறியதில் உண்மையில்லை.
 
பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்டது எரிக்கப்படவில்லை. தயா ரத்னாயக்கா இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் யுத்தக் களத்தில் இருந்திருக்கவில்லை.
 
அதேபோல, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் உடல் எரிக்கப்பட்டு அஸ்தி கடலில் வீசப்பட்டதாக தயா ரட்நாயக்கவின் கூறிய தகவல்கள் தவறானது. என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்