ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு..! பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்து பேச்சுவார்த்தை..!!

Senthil Velan

செவ்வாய், 9 ஜூலை 2024 (17:41 IST)
பயங்கரவாதத்திற்கு எதிராக, ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
 
ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி மாஸ்கோவில் உள்ள க்ரெம்ளின் மாளிகையில் அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எரிபொருள், வணிகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
 
மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு புடின் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,  40 ஆண்டுகளாக இந்தியா பயங்கரவாதத்தை சந்தித்து வருகிறது என்றார்.  பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்ப்போம் என்று அவர் தெரிவித்தார்.  
 
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உள்ள உறவு ஆழமானது என்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுவடையும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

ALSO READ: ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு இபிஎஸ் நேரில் ஆறுதல்.! திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என பேட்டி.!!
 
மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக, ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்று மோடி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்