ப்ளேபாய் மாடல் ஆண் நண்பரின் வீட்டில் மர்ம மரணம்

சனி, 25 ஆகஸ்ட் 2018 (13:14 IST)
முன்னாள் ப்ளேபாய் மாடல் கிறிஸ்டினா கார்லின்-க்ராஃப்ட் அவரது வீட்டின் படுக்கையறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
 
அவரது ஆண் நண்பரே இவ்வீட்டுக்கு சொந்தக்காரர். அவருடன் கிறிஸ்டினா ஒன்பது வருடங்கள் டேட்டிங்கில் வாழ்ந்துவந்ததாக  உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்ததாக அவர் போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். திருடுபோன பொருள்களை போலீசார் கண்டுபிடித்து, அதை அவரிடம் கொடுக்க சென்றபோதுதான் போலீசார் கிறிஸ்டினாவின் உடலை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துளளது. 
 
கொள்ளை நடந்த தினம் மற்றும் அதற்கு முன் இரண்டு நாட்களும் ஒரு சந்தேக ஆண் நபர் அந்த குடியிருப்பு வளாகத்தில் இருந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. 
 
இதனை வைத்துக்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு போலீஸார் முன்நோக்கி செல்வதாகவும், விரைவில் இந்த கொலை குறித்த பின்னணி உண்மைக்கள் கண்டுபிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்