இடி இடித்ததும்; வானில் தோன்றிய சிவப்பு நிற ஒளி : ஏலியன் வருகையா?? (வீடியோ)
சனி, 15 ஜூலை 2017 (18:31 IST)
ஹங்கேரியில் இடி இடித்த போது வானில் பயங்கரமாக சிவப்பு நிற ஒளி தோன்றியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஹங்கேரியில் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த போது வானில் திடீரென சிவப்பு நிற ஒளி ஒன்று தோன்றியது. இதை கண்ட மக்கள் பலர் ஏலியனின் வருகை என அச்சத்தில் உறைந்தனர்.
இது போன்று ஐந்து முறை தோன்றியதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.