ஹரியாணா மாநிலத்தில் வரும் 21ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதை அடுத்து இந்த மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி சமீபத்தில் பங்கேற்று பேசியபோது, ‘கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்குச் சொந்தமான நீர், ஹரியாணா விவசாயிகளுக்குச் சொந்தமான நீர், பாகிஸ்தான் பக்கம் பாய்கிறது. இந்த நீரை மோடியாகிய நான் தடுத்து நிறுத்தி, உங்களுடைய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் கொண்டுவருவேன்’ என்று கூறினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீரைத் தடுப்போம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளது தவறானது ஆகும்.