இந்நிலையில் தாலிபன்களுக்கு பாகிஸ்தான் நேரடியாக உதவி வருவதாக கூறி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது ஆப்கான் ராணுவம். ஆம், ராணுவத்தினர் தாலிபன் தீவிரவாதிகளிடம் கைப்பற்றிய பாகிஸ்தான் அடையாள அட்டைகளை ஆதரமாக வெளியிட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் அரசு தாலிபன்களுடன் ரகசியமாக கூட்டு வைத்து ஆப்கானிஸ்தானில் அவர்களுக்கு உதவி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது ஆப்கான் ராணுவம். முன்னதாக ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதற்கு பாகிஸ்தான் மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.