அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.வி.பி-ஐ மூட உத்தரவு

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (20:00 IST)
அமெரிக்க நாட்டிலுள்ள முக்கிய வங்கியான சிலிக்கான் வேலி வங்கிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அந்த வங்கியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாட்டிலுள்ள சிலிக்கான் வேலி என்ற வங்கி மிகவும் பிரபலமானது மற்றும் பெரியது.

கொரொனா பரவிபோது, உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை உலகிலுள்ள நாடுகளும், முன்னணி நிறுவங்களும் சந்தித்தது. இது மக்களையும் பாதித்தது. எனவே, இந்த வங்கியின் வாடிக்கையாளார்களும்,தொழில் நிறுவனங்களும், தங்கள் சேமிப்பில் உள்ள தொகையை சில நாட்களாக தொடர்ந்து எடுத்து வந்தனர்.

வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் பணத்தை அதிகளவில் எடுத்ததால், அந்த வங்கி தோல்விப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சிலிக்கான் வேலை வங்கியை மூட கலிபோர்னியா நிதி பாதுகாப்பு மற்றும் புத்தாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், கடந்த 18 மாதங்களில் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்த்தப்பட்டுள்ளதல், பல நிறுவங்கள் இதுபோல் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் தாக்கத்தால் சிலிகான் வேலி வங்கியின் தாய் நிறுவனமான எஸ்.வி.பி பைனான்சியல் குழுமத்தின் பங்குகள், நியூயார்க் பந்துச் சந்தையில் இன்று 70% அளவு சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்