நீர்மூழ்கி கப்பலில் இருந்து வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்த சோதனைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நீர் மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தி முடித்தது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வழிநடத்துதலில் இந்த சோதனை நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து வடகொரியாவின் வெளியுறவு துறை அமைச்சர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "தென் கொரியாவுடன் அமெரிக்கா நடத்தி வருகிற கூட்டு போர் பயிற்சிகளை நிறுத்திக்கொண்டால், நாங்களும் எங்கள் அணு ஆயுத திட்டங்களை நிறுத்திக்கொள்வோம்.
எங்களை தற்காத்து கொள்வதற்காக நாங்கள் அணு ஆயுத திட்டங்களை மேற்கொள்வதற்கு அமெரிக்காதான் காரணம். தென் கொரியாவுடனான போர் பயிற்சியை அமெரிக்கா நிறுத்தி விட்டால் பேச்சு வார்த்தைக்கான கதவு திறக்கும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், வடகொரியாவின் இந்த செயலுக்கு அமைரிக்க அதிபர் பாரார் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.