சீனாவின் வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன் பின் இந்தியா உள்பட உலகின் 200 நாடுகளில் பரவி மனித இனத்திற்கே சவாலாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கிவிட்டது என்பதும், லட்சக்கணக்கான பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது