நைஜீரியாவில் கிராமத்தில் புகுந்த பயங்கரவாத கும்பல்! – பலரை கொன்று குவித்ததால் பரபரப்பு!

திங்கள், 12 ஜூலை 2021 (10:29 IST)
நைஜீரியாவில் பயங்கரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் பயங்கரவாதிகளால் ஒரு கிராமமே சூறையாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரிய நாட்டின் வடமேற்கு பகுதிகளில் ஆயுதம் தரித்த பயங்கரவாத கும்பலின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து சூறையாடுவது, குழந்தைகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்களில் இந்த கும்பல் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் வடமேற்கு பகுதியான ஷாம்பாராவில் மராடூன் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குள் நுழைந்த பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக அனைவரையும் சுட்டு தள்ளியதுடன், வீடுகளுக்கும் தீ வைத்துள்ளனர். மேலும் அருகில் உள்ள சில கிராமங்களிலும் இவ்வாறாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு குறிப்பிட்ட எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்