#FactCheck: நரம்பு பிரச்சனைகளும் கொரோனா பாதிப்பின் அறிகுறிகளா?

புதன், 29 ஏப்ரல் 2020 (14:04 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டவரளுக்கு நரம்பு பிரச்சனைகளும் ஒரு அறிகுறிதான் என தெரியவந்துள்ளது. 
 
உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் இறந்துள்ள நிலையில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் இருக்கும் என கூறப்பட்டது. 
 
ஆனால். அதன் பிறகு அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தாக்குகிறது எனவும் கூறப்பட்டது, அந்த வகையில் தற்போது நரம்பியல் சார்ந்த பிரச்சனைகளும் கொரோனா அறிகுறிகள் என கூறப்பட்டுள்ளது. 
 
சீனாவின் வுஹானில் இருந்து ஜமா நரம்பியலில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு தகவலில் லேசான COVID-19 நோய்த்தொற்றுடைய 36% நோயாளிகளில் நரம்பியல் பிரச்சனைகளை அறிகுறிகளாக காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்