உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள்தோறும் லட்சக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவிலான கொரோனா பாதிப்பு 48 லட்சத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,01,532 என்றும், கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18,58,047 என்றும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,16,651 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,27,664 என்றும், உலக பாதிப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் தான் பாதிப்பு என்றும் தெரிய வருகிறது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 90,978 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் 143 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை அடுத்து இரண்டாமிடத்தில் ரஷ்யா உள்ளது. இந்நாட்டில் 281,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் 2631 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்பெயினில் 277,719 பேர்களும், இங்கிலாந்தில் 243,695 பேர்களும், பிரேசில் நாட்டில் 241,080 பேர்களும், இத்தாலியில் 225,435 பேர்களும், பிரான்ஸில் 179,569 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 95,698 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 3,025 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது