இனி சீனா இல்ல அமெரிக்கா.. Tiktok-ஐ விலைக்கு வாங்கும் Microsoft !!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (10:27 IST)
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க வணிக செயல்பாடுகளை கைப்பற்றயுள்ளதாக தகவல். 
 
இந்திய அரசு சமீபத்தில் அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி வந்த டிக்டாக், ஹலோ ஆகிய செயலிகளும் இதில் அடங்கும்.   
 
ஏற்கெனவே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 59 செயலிகளும் நீக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த செயலிகளையும் நெட்வொர்க் நிறுவனக்கள் மூலமாக மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் டிக்டாக் செயலியை அமெரிக்காவும் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின.    
 
தகவலின் படி, அமெரிக்காவின் ஃபெடரல் ஊழியர்கள் சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவு அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.    
 
பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  
 
இந்நிலையில் டிக்டாக்கை அமெரிக்காவில் நிர்வகிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஈடுப்பட்டு வந்த நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் என்ற குறுகிய வீடியோ தளத்தை வாங்க தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
 
ஆம், இதற்கான ஒப்பந்ததை செப்டம்பர் 15, 2020-க்குள் டிக்டோக்கின் தாய் நிறுவனமான பைடென்ஸுடன் முத்திரையிட மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. டிக்டாக்கின் அமெரிக்க நிர்வாகம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் சென்றால் அதன் தடை நீக்கப்பட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்