‘வர்தா’ புயலின் தாக்கமே முடியவில்லை : அதற்குள் வருது ‘மாருதா’ புயல்

புதன், 14 டிசம்பர் 2016 (14:41 IST)
வர்தா புயலின் தாக்கமே இன்னும் சென்னையிலிருந்து விலகவில்லை. அதற்குள் மற்றொரு புயல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 


 
சமீபத்தில் சென்னையில் கரையை கடந்த வர்தா புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பல ஆயிரம் மரங்கள், மின் கம்பிகள் சரிந்து கீழே விழுந்தன.  ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
வங்ககடலில் உருவான அந்த புயலுக்கு  ‘வர்தா’ என பாகிஸ்தான் நாடு பெயர் வைத்தது. அதற்கு  ‘சிகப்பு ரோஜா’ என்று பொருள். 
 
இந்நிலையில், இந்திய பெருங்கடலில் தற்போது மற்றொரு புயல் ஒன்று உருவாகியுள்ளது. அதற்கு ‘மாருதா’ என இலங்கை அரசு பெயர் வைத்துள்ளது.
 
ஆனால் அந்த புயல் எந்த தேதியில், எந்த பகுதியில் கரையைக் கடக்கும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்